திரு.கக்கனஜி அவர்கள். 18.06.1908 - 28.12.1981இந்திய நாட்டின் மக்கள் பணம் அரசியல்வாதிகளால் கொள்ளையடிக்கப்பட்டு 70 லட்சம் கோடி ஸ்விஸ் நாட்டு வங்கியில் இருப்பதை மீட்போம் என காங்கிரஸ் தனது தேர்தல் வாக்குறுதியில் சொன்னது... ஆனால் தேர்தல் முடிந்து இத்துனை நாள் ஆகியும் அவர்களால் அதை செய்ய முடியவில்லை. செய்ய முடியவில்லை என்பதை விட செய்ய தாயாரில்லை என்று சொல்லலாம். இந்த இந்த காங்கிரஸ் கட்சியில்தான் இந்த மனிதனும் இருந்தார் என்பதை நம்புங்கள்.
'கக்கன்' - ஆட்சி அதிகாரத்தில் இருந்தும், எளிமையின் சின்னமாக இனறைய இளைய சமுதாயத்திற்க்கு அடையாளம் காட்டப்படுபவர். ஆடம்பரம் என்பதை அறியாதவர். தமிழக மக்கள் அறிந்த கக்கன் 18.06.1908 அன்று மதுரை மாவட்ட, மேலூர் தாலுக்காவிலுள்ள தும்பைபட்டி கிராமத்தில் ஒரு தலித் குடும்பத்தில் பிறந்தார்.
தனது இளவயதிலேயே சுதந்திர போராட்டத்தில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக்கொண்டார். பள்ளி பருவத்திலேயே கங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டார். தலித்துகள் மற்றும் சாணார்கள் கோயில்களில் நுழைவது தடை செய்யப்பட்டிருந்த காலத்தில் அப்போது இருந்த இராஜாஜி அரசு கோயில் உள்நுழைவு அதிகாரம் மற்றும் உரிமைச் சட்டம், 1939 என்ற சட்டத்தினை கொண்டு வந்தது. இந்த நிலையை பயன்படுத்தி தலித்துக்கள் மற்றும் சாணர்களை கக்கன் அவர்கள் தலைமைத் தாங்கி மதுரை கோயிலினுள் அழைத்துச் சென்றார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயனை எதிர்த்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும் கக்கன் பங்கேற்ற காரணத்தால் அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
திரு.கக்கன் அவர்கள் பதவி வகித்து பெருமை சேர்த்த பதவிகள்:
தொகுதிப் பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று 1946 முதல் 1950 வரை உறுப்பினராக பொறுப்பு வகித்தார். கக்கன் மக்களவை உறுப்பினராக 1952 முதல் 1957 வரை பொறுப்பு வகித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை காமராஜர் விட்டு விலகியபொழுது (காமரஜர் முதல்வராக பொறூப்பு ஏற்றதால்) கக்கன் அந்தப் பதவியை ஏற்றார். இந்திய தேசிய காங்கிரஸ் 1957 இல் மீண்டும் வெற்றிபெற்று மதராஸ் மகாணத்தின் ஆட்சி பொறுப்பை ஏற்றபோது கக்கன் பொதுப்பணித்துறை(மின்துறை நீங்கலாக), அரிசன நல்வாழ்வு, பழங்குடியினர் நலத்துறை ஆகியத் துறைகளின் அமைச்சராக ஏப்ரல் 13, 1957 இல் பொறுப்பேற்று கொண்டார். மார்ச் 13, 1962 முதல் அக்டோபர் 3, 1963 வரை விவசாயத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். ஏப்ரல் 24, 1962 முதல் வணிக ஆலோசனைக்குழுவின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். அக்டோபர் 3, 1963 அன்று மாநில உள்துறை அமைச்சராக பொறுப்பேற்று 1967 இல் காங்கிரஸ் தமிழ்நாட்டில் தோற்கும் வரை அப்பொறுப்பிலிருந்தார்.
கக்கன் அவர்கள் அமைச்சராக இருந்தபோதுமேட்டூர், வைகை அணைகள் கட்டப்பட்டன. அரிசன சேவா சங்கம் உருவாக்கப்பட்டது. இந்த சங்கம் தலித்துக்களின் வாழ்வு முன்னேற்றத்திற்காக பாடுப்பட்டது. திரு.கக்கன் அவர்கள் விவசாய அமைச்சராக பொறுப்பில் இருந்த காலத்தில் இரண்டு விவாசாயப் பல்கலைக் கழகங்கள் மதராஸ் மகாணத்தில் துவக்கப்பட்டன. 1999 ஆம் ஆண்டு இவரின் பணிகளைப் பாராட்டி இந்திய அரசு இவரின் உருவப்படம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்டு கௌரவப்படுத்தியது.
உள்துறை, வேளாண்மை, அரிஜன நலத்துறை உட்பட அமைச்சரவைப் பொறுப்புகளை 9 ஆண்டுகாலம் வகித்தார். ஒரு பதவி கிடைத்தாலே தன் பரம்பரைக்கே சுருட்டிக்கொள்ளூம் இந்த ஆட்சியாளர்களை போல் இல்லாமல் திரு.கக்கன் அவர்கள் நேர்மையின் மறு உருவமாக இருந்தார்.
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் அமைச்சர் அவையில் கக்கன் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில் காமராஜர் அவர்களின் நம்பிக்கைக்குரிய சீடராக இருநதார்.அமைச்சராய் இருந்தவர் அரசு பேருந்துக்கு காத்து நின்று பயணம் போனதும்; மதுரை பொதுமருத்துவமனை யில் படுக்கை கூட இல்லாமல் தரையில் படுத்திருந்ததும் நாடறிந்த செய்தி.
1975 ஆம் ஆண்டு காமராஜர் மறைவுக்கு பிறகு திரு.கக்கன் அவர்கள் தீவிர அரசியலில் இருந்து விலகினார். 1979ம்ஆண்டு அரசு அவருக்கு இலவச பஸ் பாஸ் ,வீடு, மருத்துவ வசதி அளித்தது.